நாம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இந்த வைரஸும் இதுவரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அதில் தற்போது உருமாற்றமடைந்துள்ள வைரஸ் விகாரம் தான் ஓமிக்ரான். இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது அனைத்து வயதினரையும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க்குகளை அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
மாஸ்க்குகளைப் பற்றி கூற வேண்டுமானால், பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த துணி மாஸ்க்குகள் கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்காது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது. ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.
Post a Comment